

130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டது.
இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து ரூ.234.50 கோடி மதிப்பில் 130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சார பஸ்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
130 புதிய ஏ.சி. மின்சார பஸ்கள் ஆலந்தூர், பெரம்பூர், ஆவடி, சென்ட்ரல், பாடியநல்லூர், கேகே நகர், அய்யப்பன்தாங்கள் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து மின்சார பேருந்தில் ஏறி பார்வையிட்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பஸ்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரூ.55.58 கோடி மதிப்பில் 120 புதிய பஸ்களையும் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், தலைமைச் செயலர் சாய்குமார், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.