கோவையில் பெரியார் அறிவுலக கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தார்.
பெரியார் அறிவுலகம் - முதலமைச்சர் விஜய்
பெரியார் அறிவுலகம் - முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலக கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.

முதலமைச்சர் விஜய்

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையம் உள்ளது.

பெரியார் நூலகம்

பெரியார் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் மற்றும் த.வெ.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

ரோடுஷோ

பின்னர் அவர், அவினாசி ரோடு வழியாக விழா நடைபெறும் காந்திபுரத்துக்கு 10 கிலோ மீட்டர் தூரம் ரோடுஷோ சென்றபடி மக்களை சந்தித்தார்.

முதலமைச்சர் விஜய்க்கு காந்திபுரம் வரை சாலையின் இருபுறமும் திரண்டு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நூலகத்தின் முகப்பு பகுதியில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் கல்வெட்டை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, அறிவுலகத்தில் உள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு, அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டார்.

நலத்திட்ட உதவி

பின்னர் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார். அங்கு அவரை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்று நினைவுப்பரிசு வழங்குகிறார்கள். இதையடுத்து கோவை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்.

முதலமைச்சர் விஜய் வருகையால் கோவையில் 4,030 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com