நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநயாகர் மற்றும் அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளையொட்டி நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி வணங்கினார்.

இந்த நிகழ்வின் போது, முதலமைச்சருடன் அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வெங்கட்ரமணன் உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடனிருந்து முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முத்துராமலிங்கத் தேவரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்றார்.

X