உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: முதலமைச்சர் விஜய் விளக்கம்

தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அர்த்தம் கொள்ள வேண்டாம் என்றார்.
cm vijay
Published on
Summary

மானிய கோரிக்கையின்போது என் பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார். ஆனால் அந்த பதிலுரையில் கேள்விகளுக்கான பதில் இடம்பெறாமல், முழுக்க முழுக்க திமுக மீதான விமர்சனங்களே இருந்தன.

மிசா சட்டத்தில் கைது மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசினார்.

தலைவர்கள் கண்டனம்

உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்கு உரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும். சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும் என கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தன்னிச்சையாக வெளிப்பட்டது

இந்நிலையில், மானிய கோரிக்கையின் போது என்னுடைய பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:

சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com