

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வீ தி லீடர்ஸ் அமைப்புத் தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் விஜய், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.