

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கண்ணிகைப்பேர் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதிர்பாரா விதமாக அம்மோனியா நச்சு வாயு இன்று கசிந்தது.
இந்த துயரச் சம்பவத்தில் ஏழு பெண்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேரிட்ட விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிடப்பட்டுள்ளது.