

முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
தமிழ்நாடு சட்டசபை தொடங்கியது. சபை தொடங்கியதும் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கை கொண்ட பன்னோன்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
* முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்.
* ரூ.351 கோடி மதிப்பீட்டில் செவிலியர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும்.
* 7 அரசு மருத்துவ கல்லூரிகளில் திருநங்கைகளுக்கான அறுவை சிகிச்சை வழங்கப்படும்.
* பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்துவது அரசின் கடமை. கடந்த காலத்தில் ஆவின் பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.
* ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும்.
* முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு திட்டம் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ.470 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
* 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.