மழை பாதிப்பில் விரைந்து நடவடிக்கை: CM விஜய், MLA கனிமொழி சந்தோஷ் படங்களுடன் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்த சிறுவர்கள்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் வகையில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டார்.
 CM விஜய், MLA கனிமொழி சந்தோஷ் படங்களுடன் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்த சிறுவர்கள்
Published on: 
Summary

கோவையில் மழை பாதிப்பால் சிரமம் அடைந்த VKV அவென்யூ குடியிருப்பில், முதல்வர் விஜய் மற்றும் MLA கனிமொழி சந்தோஷ் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறுவர்கள் பதாகை ஏந்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற பதாகையை ஏந்தி சிறுவர்கள் நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பெய்த கனமழையால் தடாகம் சாலை, சோமனூர் பகுதியில் உள்ள VKV அவென்யூ குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கி, வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள், குறிப்பாக குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பத்தினர், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், தேங்கிய நீரால் பூச்சிகளின் தொல்லையும் அதிகரித்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் வகையில் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், முதலமைச்சர் விஜய் மற்றும் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் ஆகியோரின் புகைப்படங்களுடன் “நன்றி” என்ற வாசகம் இடம்பெற்ற பதாகையை ஏந்தி தங்களது நன்றியை வெளிப்படுத்தினர்.

சிறுவர்கள் பதாகையுடன் நன்றி தெரிவித்த இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com