அரசு மதிப்பிட்டதை விட 32% குறைவு: முதலமைச்சரின் புதிய அலுவலக பணிக்கு தேர்வான பிரபல நிறுவனம்

பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இடம் மாறுதல் நடைபெறுகிறது.
TN CM Vijay
Published on
Summary

முதலமைச்சரின் அலுவலகம் புதுப்பிப்பதற்கான டெண்டரில் ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் தேர்வாகியுள்ளது.

CM புதிய அலுவலகம்

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10வது மாடிக்கு மாறுகிறது என்றும், 10வது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுகிறது.

ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை வாஸ்துபடி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்டது.

ராசி பில்டர்ஸ்

புனித ஜார்ஜ் கோட்டையின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சரின் புதிய அலுவலகம் அமையவுள்ள நிலையில், டெண்டர் தேர்வாகியுள்ளது.

அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாக ரூ.3.78 கோடிக்கு ராசி பில்டர்ஸ் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com