தடுமாறிய தி.மு.க. எம்.எல்.ஏ.- கை கொடுத்து உதவிய முதலமைச்சர் விஜய்

முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடுமாறிய தி.மு.க. எம்.எல்.ஏ.- கை கொடுத்து உதவிய முதலமைச்சர் விஜய்
Published on
Summary

சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார்.

தமிழ்நாடு சட்டசபை

தமிழ்நாடு சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபாநாயகர்

இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்த போது அமைதியாக இருந்து கேட்டிருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி போஸ்டர் காட்டுவது குரல் கொடுப்பதை ஏற்க முடியாது என கண்டிப்புடன தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் பதிலுரையின் போது அமைதியாக இருந்திருந்தால் பேச அனுமதித்து இருப்பேன் என சபாநாயகர் தெரிவித்தார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.

இதனை தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையூறாக இருந்ததால், முதலமைச்சர் விஜய் எழுந்து தன்னுடைய இருக்கையை நகர்த்தி அவர்களுக்கு உதவினார். திடீரென தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் எழுந்திரிக்க தடுமாறினார். உடனே முதலமைச்சர் விஜய் எழுந்து அவரை கைகொடுத்து தூக்கி விட்டார். இந்த காட்சிகளை நேரலையாக மக்கள் பார்த்ததோடு சிலர் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com