

மக்களின் மகத்தான ஆதரவு முதல்வர் விஜய்க்கு உள்ளது. கடந்த 100 நாட்களில் பாராட்டும் விதமாக நல்லாட்சியை முதல்வர் விஜய் கொடுத்திருக்கிறார். த.வெ.க. ஆட்சியில் முக்கிய துறைகளில் உயர்மட்டத்தில் கையூட்டு பெறுவது அறவே இல்லை.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். பிரதமர் மோடி ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஞானேஷ்குமார் தார்மீக பொறுப்பு ஏற்றாவது அவர் பதவி விலகி இருக்க வேண்டும்.
முன்பு கடைக்கோடியில் தவறுகள் நடந்தாலும் அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்தார்கள். அன்றைய தலைமை அதனை செய்ய வைத்தது. அன்று அரசியல் நாகரீகம் அவ்வாறு இருந்தது. ஆனால் இன்று 130 கோடி மக்களின் நம்பிக்கையே சிதைத்த ஒருவர் பதவியில் நீடிக்கிறார். இது இந்திய ஜனநாயகத்திற்கு இழுக்கை தரக்கூடியது.
தமிழக இடைத்தேர்தலில் த.வெ.க. தலைமையிலான எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். மக்களின் மகத்தான ஆதரவு முதல்வர் விஜய்க்கு உள்ளது. கடந்த 100 நாட்களில் பாராட்டும் விதமாக நல்லாட்சியை முதல்வர் விஜய் கொடுத்திருக்கிறார். த.வெ.க. ஆட்சியில் முக்கிய துறைகளில் உயர்மட்டத்தில் கையூட்டு பெறுவது அறவே இல்லை. அந்த நாகரிகம் கீழ் நிலையிலும் தற்போது பரவி வருகிறது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு நேர்மையான நல்லாட்சியை விஜய் கொடுத்து வருகிறார் என தெரிவித்தார். தொடர்ந்து, ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருடன், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளையும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.