12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு தங்க நெக்லஸ் அணிவித்த முதலமைச்சர் விஜய்!

முதற்கட்டமாக 5 மாவட்டங்களைச் சேரந்த மாணவர்களுக்கு இன்று பாராட்டுவிழா நடைபெற்றது.
12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு தங்க நெக்லஸ் அணிவித்த முதலமைச்சர் விஜய்!
Published on: 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 11, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாக சந்தித்து, பாராட்டி வருகிறார்.

அந்தவகையில், இந்த ஆண்டும் 2025-26ம் கல்வியாண்டு பொதுத் தேர்வுகளில் மேற்குறிப்பிட்ட வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டுகிறார் முதலமைச்சர் விஜய்.

முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள சிலத் தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று (நவ.4) பாராட்டு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி உற்சாகப்படுத்தினார் முதலமைச்சர் விஜய்.

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, வெங்கடரமணன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இருந்தனர்.

தங்க நெக்லஸ்

இதில் 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூரைச் சேர்ந்த மாணவி டி.ரிக்ஷிதாவிற்கு பாராட்டு சான்றிதழுடன் தங்க நெக்லஸ் வழங்கப்பட்டது. இதனை முதலமைச்சர் விஜயே, மாணவிக்கு அணிவித்தார்.

X