தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!

ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்.
தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளம் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவால் இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது;

“தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!

நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com