அமைச்சர்களின் வங்கி கணக்குகளை முதலமைச்சர் கண்காணித்து வருகிறார்- அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு

மக்கள் பணத்தை நாங்கள் தொடமாட்டோம். ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்யவும் விடமாட்டோம்.
அமைச்சர்களின் வங்கி கணக்குகளை முதலமைச்சர் கண்காணித்து வருகிறார்- அமைச்சர் என்.ஆனந்த் பேச்சு
Published on
Summary

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்கை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். யாரெனும் தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து விடுவார்.

மதுராந்தகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து அமைச்சர் என்.ஆனந்த் தொகுதியில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

வங்கி கணக்கு

அந்த வகையில் அமைச்சர் என்.ஆனந்த் மதுராந்தகம் தாலுகா முதுகரை ஊராட்சியில் இன்று காலை கன்மாய் அருகே வேலை செய்து கொண்டு இருந்த பெண்களிடம் த.வெ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். பெண்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி இருக்கிறோம். மதுராந்தகம் தொகுதிக்கு பல திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். மக்கள் பணத்தை நாங்கள் தொடமாட்டோம். ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்யவும் விடமாட்டோம்.

முதலமைச்சர் விஜய்

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்கை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். யாரெனும் தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து விடுவார். 50, 60 வருடம் ஆண்ட கட்சிகள் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. பலருக்கு பட்டா பிரச்சினை உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். த.வெ.க. ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம். மக்கள் பணிகள் தொடர விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கிராம மக்களிடம் அன்போடு பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com