

நாகை அருகே ஜீப்பும் லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஆயுதப் படை காவலா் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
தேவா் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் காவல் வாகனத்தில் திருவாரூருக்கு வெள்ளிக்கிழமை இரவு திரும்பினாா்.
அவரைத் திருவாரூரில் இறக்கி விட்டுவிட்டு, அவரது வாகனத்தை திருத்துறைப்பூண்டி கீழப்பனையூரைச் சோ்ந்த நாகை ஆயுதப் படையில் பணியாற்றும் காவலா் ஜனாா்த்தனம் நாகை நோக்கி ஓட்டிக்கொண்டு வந்துபோது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்பார வாகன விபத்தில் உயிரிழந்த இரண்டாம் நிலை காவலருக்கு முதலமைச்சர் நிதியதவி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
நாகப்பட்டினம் மாவட்டம். கீழ்வேளூர் வட்டம். திருகண்ணங்குடி அருகே அவர் ஓட்டி வந்த வாகனத்தின்மீது எதிரே வந்த லரி எதிர்ப்பாரதவிதாமாக மோதி விபத்திற்குள்ளானதல் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்
இரண்டாம் நிலைக் காவலர் மு. ஜனார்தனன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும். அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
மு.ஜனார்த்தனன் அவர்களை இழந்துவாடும் குடும்புத்தினருக்கும். உறவினர்களுக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது இலட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.