

சென்னையில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நாளை 40-41 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் கொளுத்த வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.