சென்னையில் 1 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் பெய்துள்ளது

சென்னையில் நேற்றிரவு கிட்டத்தட்ட 5 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது.கடந்த ஒரு வாரத்திலேயே சென்னையில் 10 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.
சென்னையில் 1 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் பெய்துள்ளது
Published on

நேற்று இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சென்னை குளிர்ந்து.

இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு கிட்டத்தட்ட 5 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்ததாகத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதீப்ஜானின் எக்ஸ் தள பதிவில், "ஜூலை மாதத்தில் சென்னையில் சராசரியாக 10 சென்டிமீட்டர் மழை பெய்யும் நிலையில், கடந்த ஒரு வாரத்திலேயே சென்னையில் 10 சென்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் ஜூன் மாதம் அதிக அளவு மழை பெய்துள்ள நிலையில், ஜூலை மாதமும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com