

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் காரணமாக நாளை (22-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.
அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரையில் (வாரநாட்களில் மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
* திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும். மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும்.
* சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையில் (வாரநாட்களில்) அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் மின்சார ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
* சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும். இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு கூடுவாஞ்சேரி செல்லும். மேலும், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.