தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீசி வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.

வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை தருகிறது. ஆனால் தொடர்ந்து வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com