

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 82 புதிய மின் தடை நீக்கும் மையங்களின் செயல்பாட்டை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னை மின்வாரிய அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. மழை காலங்களை எதிர்கொள்ள முழுவீச்சில் மின்சாரத்துறை தயார் நிலையில் உள்ளது.
இந்தியாவில் 40 ஆயிரம் மெகாவாட் மேல் மின்தேவை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு சரிவர செயல்படாததால் தான் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்சாரத்துறையில் மத்திய அரசின் தவறால் பெரும்பாலான மாநிலங்களில் பெருமளவில் பொருட் செலவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு தான் வாங்குகிறார்கள்.
செஞ்சி ஆலம்பூண்டி சிறுமி மாயம் விவகாரத்தில் எல்லா கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியில் தவறு நடந்தால் முறையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் முகப்பேரில் ஒரு சிறுமிக்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்.
நம் வீட்டு குழந்தை மாயமானது சோகமான விஷயம், 10 நாட்களை கடந்து போலீசார் தீவிரமாக தான் தேடி வருகின்றனர்.
நேருவின் தம்பி கொலை வழக்கையே திமுக ஆட்சியில் தீர்க்க முடியவில்லை, சிறுமி மாயத்தை அவர்கள் கேட்பதா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.