மருத்துவ படிப்பை அபகரிக்கும் சிபிஎஸ்சி மாணவர்கள் - RTI யில் அதிர்ச்சி தகவல்

மாநிலப் பாடத்திட்டத்தில் ஏற்பட்ட 30% சேர்க்கைச் சரிவு மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நோக்கி மாணவர்கள் மாறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Neet exam
Published on: 

நீட் தேர்வு (NEET) அறிமுகத்திற்குப் பிறகு, தமிழக மருத்துவக் கல்வியில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் சேர்க்கை பெருமளவு சரிந்து, சிபிஎஸ்இமாணவர்களின் சேர்க்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அண்மையில் வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி உறுதியாகியுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் ஏற்பட்ட 30% சேர்க்கைச் சரிவு மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நோக்கி மாணவர்கள் மாறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வானது முழுக்க சிபிஎஸ்சி பாடத்டிட்டத்தையே சார்ந்து இருப்பதால் . அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை பெறுவதற்காக இந்த சேர்க்கை எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. குறிப்பாக அறிவியல் விண்ணப்பதாரர்களிம் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

2016- 2017ம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால்கட்டத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் வெறும் 35 சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.ஆனால், நீட் தேர்வு அமலுக்கு வந்த 2017-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,113 சிபிஎஸ்இ மாணவர்களாக உயர்ந்துள்ளது.

நீ ட் தேர்வு வினாத்தாள்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இது சாதகமாக அமைகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

2017 முதல் கிடுகிடுவென உயர்ந்த சிபிஎஸ்இ மாணவர்கள் சேர்க்கை, 2026-ஆம் ஆண்டில் 56%ஆக அதிகரித்துள்ளது. நீட் தேர்வு அமல்படுத்துவதற்கு முன் 7 ஆண்டுகளில் முதன் 71 சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர், ஆனால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட பின் 7 ஆண்டுகளில் 10,767சிபிஎஸ்இ மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். 2026-ஆம் ஆண்டில் 3,776 மாநில பாடத்திட்ட மாணவர்களும், 5,134 சிபிஎஸ்இ மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.

X