சிபிஎஸ்இ (CBSE) பொதுத் தேர்வு குறித்த அட்டவணையனாது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வானது பிப்ரவரி 16-இல் 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகிறது
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் அனைத்தும் வழக்கம்போல முற்பகல் 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ஒரே நாளில் நடைபெறுகிறது.நாடு முழுவதும் இந்த பொதுத்தேர்வுகள் 2027 பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
பாடவாரியான விரிவான தேர்வு கால அட்டவணையை மாணவர்கள் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுத் தேர்வுகளுக்கு முன்னதாக நடைபெறவுள்ள செய்முறைத் தேர்வுகள் மற்றும் அகமதிப்பீட்டுப் பணிகள் =அனைத்தும் ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே அந்தந்தப் பள்ளிகளில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிர்காலம் மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வரும் நவம்பர் 9 முதல் டிசம்பர் 19, 2026 வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.