தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Cauvery water distribution
Published on

உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

15 நாட்கள்

இந்த உத்தரவின் படி கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கன அடி நீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று நீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அழுத்தம்

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் டெல்டா பாசனத்திற்காக வழக்கமான தண்ணீர் திறக்கப்படவில்லை.

கால தாமதத்திற்கு பிறகே கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் மொத்தம் 177.25 டி.எம்.சி காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற சூழல் இருக்கும் நிலையில் போதிய மழை இல்லை என கூறி கர்நாடக அரசு தண்ணீர் திறப்பத்தில் காலம் தாழ்த்தி வருகிறது.

கர்நாடகாவில் கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com