தமிழகத்திற்கான நீரை உறுதி செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை
உச்ச நீதிமன்ற அறிவுரை திறன் அடிப்படையில் தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறந்து விடக் கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முறையீடு வைத்தோம் ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே 15 நாட்களுக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது அந்த உத்தரவையும் கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துவதில்லை.
நீதிபதிகள் ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்துகிறதா கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக காவிரியில் வினாடிக்கு ஒன்பதாயிரம் கன அடிக்கும் அதிகமாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது மேலும் கர்நாடகத்தில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து கூடுதலாக நீர் திறப்பதற்கும் நாங்கள் முயற்சி எடுப்போம்.
தற்போது கர்நாடகாவில் அதிக வறட்சி நிலவு காரணமாக அதிக அளவிலான தண்ணீரை திறந்து விட முடியாத ஒரு சூழல் உள்ளது என்று கர்நாடக அரசு விளக்கமளித்துள்ளது.
கர்நாடக அரசு ஆணைய உத்தரவை பின்பற்றவில்லை உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் படியும் தண்ணீர் திறக்க வேண்டிய உத்தரவை அவர்கள் பின்பற்றவில்லை கர்நாடகம் தண்ணீர் திறக்காமல் இருப்பதன் காரணமாக சுமார் 24 லட்சம் ஏக்கருக்கு மேலாக சாகுபடி செய்ய முடியாமல் தமிழகம் பாதிப்படைந்துள்ளது.
அதே வேளையில் கர்நாடகம் 20 டிஎம்சி நீருக்கு மேலாக மடை மாற்றம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தி உள்ளனர் கர்நாடக அணிகளில் சுமார் 73 டிஎம்சி நீர் இருக்கும் நிலையிலும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க மறுக்கின்றனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக நீர் வழங்க மறுப்பதால் தமிழகத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்திற்கு தர வேண்டிய பற்றாக்குறை நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் 15 நாட்களுக்குப் பிறகுதான் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூட உள்ளது.
ஆனால் இந்த வாரமே மீண்டும் ஆணையம் ஆலோசனை நடத்தி எங்களது கருத்துக்களை கேட்டு கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இதற்காக உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதாக கர்நாடகா சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்களது பாசன பயன்பாட்டிற்கு தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கர்நாடக அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்கள் படி பார்த்தாலே அவர்களுடைய விவசாய நிலங்களில் 52 சதவிகித நிலங்களுக்கு தேவையான தண்ணீரை ஏற்கனவே கர்நாடக அரசு திறந்து விட்டுவிட்டது.
ஆனால் தமிழ்நாடு இன்னமும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது.
நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு இந்த வழக்கை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். செப்டம்பர் 15 ஆம் தேதி என்ற தேதிக்கு முன்பே வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் குறிப்பாக அடுத்த வாரமே மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் கூடி முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள் அதில் நாங்கள் ஏன் தலையிட வேண்டும் அடுத்த விசாரணையின் போது தற்போதைய நிலவரம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.