135 கிலோ மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் - 2 காவலர்கள் பணியிட மாற்றம்

கைது செய்யப்பட்டுள்ள சுகனின் டைரியில், இருவரும் லஞ்சம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணையில் தெரிய வந்துள்ளது.
seizure of 135 kg of methamphetamine
Published on: 

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த தலா 5 கிலோ அடங்கிய 27 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சா்வதேசச் சந்தையில் இதன் மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரக திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தத அடிப்படையில் 16 பேர் கொண்ட அதிகாரிகள் அடங்கிய குழு இந்த சோதனையை மேற்கொண்டனர். இந்த கடத்தல் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

காவலர்கள் பணியிட மாற்றம்

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் உள்ளூர் காவலர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் மத்திய வருவாய் புலனாய்வு தீவிர விசாரணையை மேற்கொண்டது இந்த விசாரணையின் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளோடு தொடர்பில் இருந்ததாக 2 காவலர்கள் தஞ்சாவூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சுகனுடன் டிஎஸ்பி-யின் ஓட்டுநர் சிவா, காவலர் சங்கீதா தொடர்பில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் கைது செய்யப்பட்டுள்ள சுகனின் டைரியில், இருவரும் லஞ்சம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய தவெக மாவட்டசெயற்குழு உறுப்பினரும், சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞருமான பூபாலன், சுகன் நடத்திவரும் விடுதியின் மேலாளா் மணிகண்டன், நண்பா் சதீஷ் ஆகிய நால்வரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com