அமைச்சர் வன்னியரசு புலியை துரத்திய விவகாரம் - நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வழக்கு

நீதிபதி என்.சதீஷ்குமார் தலைமையிலான வன பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
vanni arasu
Published on: 

தமிழக சமூக நீதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வன்னியரசு, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் வனவிலங்குகளைத் துரத்திச் சென்றதாக வெளியான வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன

அமைச்சர் வன்னியரசு தனது குடும்பத்தினருடன் புலிகள் காப்பகத்திற்குச் சென்றபோது எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

விதிமீறல் குற்றச்சாட்டுகள்

அந்த வீடியோக்களில், அமைச்சர் சஃபாரி வாகனத்திலிருந்து இறங்கி ஒரு புலியை நோக்கி ஓடுவதும், வனத்துறை வாகனத்தின் பானெட் மீது அமர்ந்து போஸ் கொடுப்பதும், காட்டு யானைக்கு மிக அருகில் செல்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அமைச்சரின் விளக்கம்

தான் புலியைத் துரத்தவோ அல்லது தொந்தரவு செய்யவோ இல்லை என்றும், ஆர்வத்தின் காரணமாகவே அதன் பின்னால் சென்றதாகவும் அமைச்சர் வன்னியரசு விளக்கமளித்துள்ளார்.

அமைச்சரின் மீது விசாரணை நடத்த வழக்கு

புலிகள் காப்பகத்தில் அமைச்சர் வன்னி அரசு புலியை துரத்திய சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிபதி என்.சதீஷ்குமார் தலைமையிலான வன பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வு விரைவில் விசாரணையானது நடத்தப்பட உள்ளது .

அமைச்சரின் செயல் குற்றமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்

வன்னி அரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.முதுமலை சரணாலயத்தில் புலிகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துறையின் அமைச்சராக இல்லாத நிலையில், புலிகள் காப்பகத்துக்குள் சென்று வெளியிட்டுள்ளது தண்டனைக்குரிய குற்றம் மனு.அமைச்சரின் செயல் குற்றமா ? என்பதை ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X