

சபரிமலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்துவிட்டு ஐயப்ப பக்தர்கள் காரில் ஊர் திரும்பி வரும்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் மணிகண்டன், கோவிந்தன், பழனிவேல் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் சிறுமி உள்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.