

பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்தின் பின்னால் சென்ற கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், பெண்கள் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
ராமநாதபுரத்தில் நடந்த திருமணத்திற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது அதிகாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.