

சபை நிகழ்வுகள் தற்போது நேரலையில் உள்ளது, அதிகாரிகள் அதை பார்த்து குறிப்பெடுத்து கொள்வர். வார் ரூம் அமைத்துள்ளதால் அங்கு நேரலையை பார்த்து அதிகாரிகள் குறிப்பெடுத்துக்கொள்வர் என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று நேபாள வெள்ளத்தில் சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் மீட்பு குழு அமைத்து உடனடியாக விவரம் சேகரிக்க வேண்டும் என்றார்.
நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கிய தமிழர்களை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை தேவை. சுற்றுலா செல்வோருக்கு மாநில சுற்றச்சூழல் பற்றி முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
டெல்டா பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் நேபாளம் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளனர். தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து தமிழர்களை உடனடியாக மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,
கேள்வி நேரம் நடக்கும் போது துறை செயலாளர்கள் அவைக்கு வந்து குறிப்பு எடுக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும். எந்தெந்த துறை பிரச்சனை வரும்போது அந்தந்த அரசு துறை அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில்,
சபை நிகழ்வுகள் தற்போது நேரலையில் உள்ளது, அதிகாரிகள் அதை பார்த்து குறிப்பெடுத்து கொள்வர். வார் ரூம் அமைத்துள்ளதால் அங்கு நேரலையை பார்த்து அதிகாரிகள் குறிப்பெடுத்துக்கொள்வர்.
திமுக எம்எல்ஏ கே.என்.நேரு
நேரலை என்பது எப்போதும் இருப்பது தான். எனவே துறை செயலாளர்கள் இருக்க வேண்டும். முதலமைச்சர் இல்லையென்றால் முதன்மை செயலாளராவது இருக்க வேண்டும் என்றார்.