இடைத்தேர்தல் முடிவுகள்: வி.சி.க.-வை சிறுமைப்படுத்த முயற்சி- திருமாவளவன்

இரண்டு தொகுதிகளிலும் விசிக-வின் வாக்குகள் தவெக-விற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொல் திருமாவளவன்
தொல் திருமாவளவன்
Published on: 

இடைத்தேர்தலில் பா.ம.க. யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்ததால், அந்த வாக்குகள் த.வெ.க.-வுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது:-

2026 பொதுத் தேர்தலின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வாக்குகள் எல்லாம் த.வெ.க.-வுக்கு போய்விட்டது என்றார்கள். இடைத்தேர்தலில் த.வெ.க. வெற்றிக்கு பா.ம.க. வாக்குகள்தான் காரணம் என்கிறார்கள்.

விசிக-வை குறிவைத்து கடுமையாக விமர்சனம்

இப்போது விசிக வாக்குகள் தி.மு.க.வுக்கு போய்விட்டதாக என்ற கேள்வி எழுகிறது. சமூக ஊடகங்களிலும் சரி, மற்ற விவாதங்களிலும் சரி, விவாதிக்கக் கூடியவர்கள் விசிக-வை குறிவைத்து திமுக-வில் இருந்தபோதும் அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கருதியவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

தற்போது த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதால் விசிக-வின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில், யாருக்கும் ஆதரவு இல்லை என்ற பா.ம.க.-வின் 100 சதவீதம் வாக்குகள் த.வெ.க.வுக்கு வந்துவிட்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

த.வெ.க.வுக்கு பாமக-வினர் எப்படி வாக்களிப்பார்கள்

விசிக அங்கம் வகிக்கும் த.வெ.க.வுக்கு பாமக-வினர் எப்படி வாக்களிப்பார்கள் என்பது ஒரு கேள்வி. கடந்த காலத்தை அப்படி நடந்திருக்கு.

இந்த தேர்தலில் மட்டும் த.வெ.க.வுக்கு வெளிப்படையாக ஆதரவு அறிவிக்காத நிலையில், 100 சதவீதம் வாக்களித்து விட்டார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது விசிக-வுக்கு தரும் முக்கியத்துவத்தை குறைப்பதுதான்.

நாங்கள் இடம் பிடித்துள்ள கூட்டணி வெற்றி

இரண்டு தொகுதிகளிலும் விசிக-வின் வாக்குகள் தவெக-விற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி வாரியாக விவரம் வந்த பின்னர்தான் உறுதிப்படுத்த முடியும். எங்களை பொறுத்த வரை நாங்கள் இடம் பிடித்துள்ள கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தவெக மற்றும் அதன் தலைவர்கள் இதை எப்படி பார்க்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com