மதுரை அருகே நேற்று மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

காணாமல் போன சிறுவன் முத்துவேல் படத்துடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி வைரலாக பரவியது
madurai
Published on: 

மதுரை அருகே விளையாட சென்று மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 42). இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பெரியகருப்பன் தற்போது வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சத்யாவும் விவசாய கூலிவேலைக்கு செல்வது வழக்கம்.

சிறுவன் மாயம்

இவர்களுடைய மகன் முத்துவேல் (7), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந் தான். இவன் நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டின் அருகில் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்தான்.

இதற்கிடையே சத்யா வழக்கம்போல் வேலைக்கு சென்றவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினார்.அப்போது வீட்டில் மகன் இல்லாதது கண்டு அக்கம் பக்கத்தில் விசாரித்தார்.

ஆனால் யாரும் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டதால் அதிர்ச்சி அடைந்த சத்யா தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு அந்த பகுதி முழுவதும் பதட்டத் துடன் தேடினார். இருந்தபோதிலும் மகன் முத்துவேல் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

காவல்துறையிடம் புகார்

தொடர்ந்து கிராம மக்கள் உதவியுடன் பல்வேறு இடங்களில் சிறுவனை தேடிப் பார்த்தார். ஆனால் நீண்ட நேரமாக தேடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. பின்னர் காணாமல் போன சிறுவன் முத்துவேல் படத்துடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செய்தி வைரலாக பரவியது. மேலும் சத்யா கீழவளவு போலீஸ் நிைலயத்தில் தனது மகனை காணவில்லை, கண்டுபிடித்து தருமாறுபுகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுவனை தீவிரமாக தேடினர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் கிராம மக்கள் உதவியுடன் நீர்நிலைகள், புதர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறுவனை தீவிரமாக தேடினர்.

இந்தநிலையில் மாயமான சிறுவன் முத்துவேல் இன்று மதியம் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த ஓடு வேயப்பட்ட வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

நேற்று போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கிராம பகுதியில் தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், பிணமாக கிடந்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com