நடிகரை வைத்து பாஜகவின் 'சி' பிளான் தமிழகத்தில் எடுபடாது - மாணிக்கம் தாகூர்

'ரிமோட் கன்ட்ரோல்' மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உள்ளது.
மாணிக்கம் தாகூர்
Published on: 
Summary

நடிகரை வைத்து பாஜக செய்யும் சி பிளான் எடுபடாது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் விரைவில் அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், அதன் ஒரு பகுதியாக நேற்று தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுக்கு தலா ஒரு வெள்ளி காமாட்சி விளக்கையும் பரிசாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ஆளும் தவெக அரசின் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் இதுகுறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

சி பிளான்

நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டசபை தேர்தலுக்கு பின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்ததாக, அமமுக., பொதுச்செயலர் தினகரன் கூறுகிறார்.

பாஜகவுக்கு எதிரான நிலையில் திருமாவளவன் தெளிவாக உள்ளார். தமிழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் தினகரனை வைத்து, பாஜக தற்போது 'சி' பிளானை செயல்படுத்துகிறது. அண்ணாமலைக்கு புது முகமூடி கொடுத்து, கட்சியை விட்டு வெளியேற செய்தது.

அவர், பாஜவுக்கு ஆதரவாகவே பேசுகிறார். பாஜவின் 'சி' பிளானில், ஒரு நடிகரையும் தயார் செய்கிறது. ரசிகர் கூட்டத்துடன், பாஜகவில் அவர் சேரவுள்ளார்.

இதற்கான 'ரிமோட் கன்ட்ரோல்' மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உள்ளது. தமிழகத்தில் பாஜக திட்டம் ஒருபோதும் நடக்காது." என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com