திருப்பரங்குன்றம் விவகாரம்: மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வீட்டு காவலில் சிறை வைப்பு- போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

வனவாசியில் உள்ள மேற்கு மாவட்ட தலைவர் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட தலைவர் அரிராமன் மற்றும் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி மதுரைக்கு செல்ல விடாமல் வீட்டு காவலில் போலீசார் வைத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் வீட்டு காவலில் சிறை வைப்பு- போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
Published on: 

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போலீசார்

இந்த நிலையில் இன்று சேலம் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் அரிராமன் தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் சென்று கோவிலுக்கு தீபத்தை தரிசனம் செய்வதற்காக புறப்பட்டனர். இது பற்றி முன்கூட்டியே உளவு பிரிவு போலீசார் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை வனவாசியில் உள்ள மேற்கு மாவட்ட தலைவர் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட தலைவர் அரிராமன் மற்றும் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி மதுரைக்கு செல்ல விடாமல் வீட்டு காவலில் போலீசார் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அரிராமன் வீட்டிற்கு வருகை தந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

X