தமிழகத்தில் பா.ஜ.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கோவையில் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டி.கிருஷ்ணகிரியில் நரசிம்மன் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் பா.ஜ.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கோவையில் அண்ணாமலை
Published on

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது.

முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.

இதேபோல், தெற்கு சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நீலகிரியில் எல்.முருகன் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com