

தமிழக சட்டபையில் இன்று 4வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்பசபையில் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
முதலமைச்சர் கொண்டு வரும் தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டசபையில் பேசியதாவது:-
சட்டமுன்வடிவு பரிசீலனையில் உள்ளபோது தனித்தீர்மானம் கொண்டு வரும் அவசரம் என்ன?
மக்களின் தேவை அறிந்து மாற்றம் கொண்டு வருவது அவசியம். மாற்றம ஒன்றே மாறாதது.
அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டே நாடாளுமன்றம் பெரியதாக கட்டப்பட்டுள்ளது.
மாற்றத்தை நாம் ஏற்க வேண்டும். அதே வேளையில் தமிழ்நாட்டில் பாதிப்பில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தொகுதி மறுவரையறை பரிசீலனையில்தான் உள்ளது. அடுத்த தலைமுறையினரை மனதில் வைத்தே கொண்டு வரப்படுகிறது.
பெண்களுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி பாஜக என்பதை நாடறியும்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை பாஜக எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.