

சட்டசபையில் முதலமைச்சர் விஜய் "அப்பாவை காணோம்" என்று கூறியதற்கு, விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து அநாகரிகமாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் அதற்கு அவர் வில்லகம் அளித்துள்ளார்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' மாத இதழின் டிஜிட்டல் பதிப்பின் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்திற்கு சென்று அப்பா எங்கே, அப்பா எங்கே என்று சிலர் தேடுகிறார்கள்.
வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார்? என்று சொல்வார்கள். அதை விட்டுவிட்டு, சட்டமன்றத்திற்கு சென்று அப்பாவை தேடினால் யாருக்கு தெரியும்? இப்படிப்பட்ட நபர்களின் ஆட்சிதான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது" என பேசினார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு அநாகரிகமானது என தவெக தரப்பில் இருந்தும் பிற அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவும் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில்,
"ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் மேடையில் பேசிய பேச்சைத் திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை.
தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்." எனத் தெரிவித்துள்ளார்.