தாராபுரம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை- வாக்களித்த பின் பானுமதி பேட்டி

இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கினை செலுத்திய அதிமுக வேட்பாளர் பானுமதி
வாக்கினை செலுத்திய அதிமுக வேட்பாளர் பானுமதி
Published on: 
Summary

தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஆர்வமுடன் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி தனது வாக்கினை பதிவு செய்தார். தாராபுரம் எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது என அவர் தெரிவித்தார். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, தி.மு.க. சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் சுயேட்சைகள் உள்பட இந்த தொகுதியில் மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் மொத்தம் 4,37,094 வாக்களர்கள் உள்ளனர்.

வாக்குப்பதிவு

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வின் கோட்டை

இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் பானுமதியும் தனது வாக்கினை பதிவு செய்தார். இதன் செய்தியாளர்களை சந்தித்த பானுமதி கூறியதாவது:-

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நிச்சயமாக எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தலுக்கான பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். தாராபுரம் அ.தி.மு.க வென்ற தொகுதி. எப்பொழுதுமே இந்த தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com