முதலமைச்சருக்காக தயாராகும் "பாமணி" இல்லம்- விஜய் ஆய்வு

முதலமைச்சருக்காகத் தயாராகி வரும் இல்லத்தின் பெயர் ‘பாமணி' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN CM Vijay
Published on: 

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைந்துள்ள பொதிகை வளாகத்தில், தமக்காகத் தயாராகி வரும் புதிய அரசு இல்லத்தை ஆய்வு செய்ய முதலமைசசர் விஜய் வருகை தந்தார்.

பொதிகை வளாகத்தில் புனரமைக்கப்பட்ட பாமணி இல்லம் முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக மாற்றப்பட உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.

நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் வந்து செல்ல நீண்ட நேரம் பயணிக்க வேண்டியுள்ளதால் முகாம் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்காகத் தயாராகி வரும் இல்லத்தின் பெயர் ‘பாமணி' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசு இல்ல பணிகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.

X