ஆசிய பாராலிம்பிக்: வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
ஜெஹான் டொரப் மதன் - விஜய்
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதனுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நேற்று முன் தினம் தொடங்கின. வரும் 24-ந்தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

வெண்கலம் வென்ற ஜெஹான் டொரப் மதனுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து, ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் இவ்வெற்றி அமைந்துள்ளது.

வீரர் ஜெஹான் டொரப் மதன் அவர்கள் வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று மேலும் பல உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com