

நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக மதிக்கப்படவில்லை என்று இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உபசன்னதி களான ஸ்ரீவேதாந்த தேசிகன் மற்றும் தாத தேசிகன் சன்னதிகளில் நடைபெற்ற உற்சவத்தின் போது, திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவை முறையாக மதிக்கப்படவில்லை என்று இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து கலைந்து போகச்செய்தனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு, நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்தி, கோவிலில் முறைப்படி உற்சவங்கள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.