

மத்திய அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் ரெயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான எனது கோரிக்கையை ஏற்று, ஆடுதுறை- கும்பகோணம்- சுந்தரபெருமாள் கோவில் இடையிலான ஒற்றை ரெயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றும் பணிக்கு ஒப்புதல் அளித்தமைக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் மோடிக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரட்டை ரெயில் பாதைத் திட்டம், இப்பகுதி மக்களின் பயண வசதியை மேம்படுத்துவதுடன், ரெயில் போக்குவரத்து திறன் மற்றும் பிராந்திய இணைப்பையும் மேலும் வலுப்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.