355 குளிர்சாதனப் பேருந்துகள் தவிர சென்னையில் 3600 மாநகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்!

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.
355 குளிர்சாதனப் பேருந்துகள் தவிர சென்னையில் 3600 மாநகரப் 
பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்!
Published on: 

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பாக 3958 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மகளிர் கட்டணமில்லா பேருந்துப் பயணம் விரிவாக்க திட்டம் மூலம், இவற்றில் 355 குளிர்சாதனப் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

சாதாரண, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், மற்றும் டீலக்ஸ் பேருந்து சேவைகள் இதில் அடங்குகின்றன. கடந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநகர பேருந்துகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் இயக்கப்படுகிறது. அந்த பேருந்துகளிலும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் அதிக பேருந்துகளை இயக்கக்கூடியது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகும்.

விரிவாக்கம்

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தை, வெற்றிப் பயணம் திட்டம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்து, அத்திட்டத்தை இன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com