

நீதிமன்ற ஆணைப்படி மலைத்தூணுக்கு சென்று அரசு அதிகாரிகள் தீபம் ஏற்ற வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தீபம் ஏற்றலாம் என கடந்த முறை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார், ஆனால் அதை அப்போதைய திமுக அரசு பின்பற்றவில்லை.
* ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
* அரசு அதிகாரிகள் மட்டும் சென்று மலையில் தீபம் ஏற்றச்சொல்லி உள்ளது உச்சநீதிமன்றம்.
* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசே பிரச்சனையை உண்டாக்கக்கூடாது.
* மத நல்லிணக்கத்தை சீர்குலைய விட மாட்டோம் என்று கூறி, குறைய வைத்துவிட வேண்டாம்.
* புரிதல் இன்றி தவெக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதா?
* தமிழகம் கலவர பூமியாக மாறாது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறுகிறார். ஆனால் இன்று மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது யார்?
* நாளை மலைத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பாகும்.
* நீதிமன்ற ஆணைப்படி மலைத்தூணுக்கு சென்று அரசு அதிகாரிகள் தீபம் ஏற்ற வேண்டும்.
* மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் அந்த இடம் அவர்களுக்கு சொந்தமாகி விடாது.
* கள்ளக்குறிச்சி ஆட்சியர் தரப்பு புகாரளிக்கவில்லை. ஆனால் அவரது கணவர் புகாரளித்துள்ளாரே.
* ஆட்சியர் புகார் தரவில்லை என தமிழக அரசு தரப்பு ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ளது.
* தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் கூட வாக்கு வங்கி இல்லாத காங்கிரஸ் கட்சி தற்போது Dead body ஆக உள்ளது.
* தலையில் பேன் இருப்பது போல் யாரோ ஒருவர் உடலில் சவாரி செய்து தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ்.
* செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் ஈகோ பார்க்காமல் சிபிஐ விசாரணை கோரி முதல்வர் கடிதம் எழுத வேண்டும்.
* சிறுமி மாயமாகி 40 நாட்களாகிவிட்டது. இன்னும் துப்புக் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஈகோ பார்க்கக்கூடாது.
* சிபிஐ அவர்களாக விசாரணைக்கு வர முடியாது. தமிழக முதலமைச்சர் தான் கடிதம் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.