எச்சரிக்கை விடுத்தும் வேலை செய்யாத நிர்வாகிகள் - பா.ம.க.வில் அதிரடி மாற்றம் செய்ய அன்புமணி முடிவு

ஏற்கனவே சில மாவட்ட செயலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார்கள் வந்தன.
Anbumani
Published on: 
Summary

தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பா.ம.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பா.ம.க.

டாக்டர் அன்புமணி தலைமையில் பா.ம.க. கடந்த தேர்தலை சந்தித்து 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா உள்பட 4 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் பணியாற்றுகிறார்கள்.

அன்புமணி ராமதாஸ்

டாக்டர் அன்புமணி கட்சியை பலப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி புதிய செயல் திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளார்.

ஏற்கனவே பா.ம.க.வுக்கு கட்சி மாவட்ட அளவில் 100 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். கட்சியை வலுப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சில மாவட்ட செயலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார்கள் வந்தன.

தொகுதிக்கு ஒரு செயலாளர்

இதையடுத்து அவர்களுக்கு டாக்டர் அன்புமணி எச்சரிக்கை விடுத்தார். சரியாக வேலை செய்யாதவர்கள் பதவி பறிக்கப்படும் என்று கூறப்பட்டது. அப்படி இருந்தும் சிலரது வேலைகளில் திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 234 பேரை நியமிக்கவும், அதன் மூலம் கட்சியின் வளர்ச்சியை கிராமங்கள் வரை கொண்டு செல்ல முடியும் என்றும் டாக்டர் அன்புமணி கருதுகிறார்.

எனவே தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று பா.ம.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

X