

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வேட்பாளராக களமிறங்கியுள்ள சுந்தர் சி-யை மறைமுகமாக சுட்டிக்காட்டி தி.மு.க எம்பி கனிமொழி பேசினார்.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் இந்த தொகுதிக்கு (மதுரை மத்தி) சம்பந்தமே இல்லாத வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் தெரிந்த வேட்பாளராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லியில் கூட ரசிகர்கள் உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.