சென்னையில் 8ந் தேதி நடக்கிறது அ.ம.மு.க. மகளிர் தினவிழா- டி.டி.வி.தினகரன் பேசுகிறார்

அ.ம.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது.நிகழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
சென்னையில் 8ந் தேதி நடக்கிறது அ.ம.மு.க. மகளிர் தினவிழா- டி.டி.வி.தினகரன் பேசுகிறார்
Published on

சென்னை:

அ.ம.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. மார்ச் 8-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும் அ.ம.மு.க. மகளிர் தின விழாவில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நிலையிலான மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com