

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் பின்வருமாறு:-
இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. த.வெ.க. விடம் கேட்க வேண்டும். இல்லையென்றால் திமுக-விடம் கேட்க வேண்டும். இடையில் எங்களிடம் கேட்டால் என்ன தெரியும். தெரியாத காரணத்தினால் முழுமையான பதில் கூற முடியாது. வழக்கைப் பற்றி கேட்டால் போட்டவர்களுக்கு தெரியும். சந்திப்பவர்களுக்கு தெரியும். அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
சட்டம்-ஒழுங்குதான் சந்தி சிரிக்கிறதே. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. நீங்கள் (செய்தியாளர்கள்) வீடு போய் சேர்ந்தால்தான் உயிருக்கு உத்தரவாதம். கசாப் கடையில் வெட்டி சாய்ப்பது போல் ரோட்டில் செல்பவர்களை சாய்க்கும் காட்சிகளை பார்க்கிறோம். சட்டம்-ஒழுங்கே கிடையாது. முதலமைச்சர் அக்கறை காட்டுவதில்லை.
அரசு அலுவலத்திற்கு வருவதுபோல், தலைமை செயலகத்திற்கு காலை 10 மணிக்கு முதல்வர் வருகிறார். மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்று விடுகிறார். அடுத்தநாள் வீட்டில் இருந்து வருகிறார். இப்படித்தான் போய்கிட்டு இருக்கு. வேறு என்ன சாதித்தார்?. இந்த 6 மாதத்தில் என்ன திட்டம் கொண்டு வந்து சாதித்துளளார். மக்களுக்கு நன்மை கிடைச்சிருக்கு. ஒன்னும் கிடையாது. ரீல்ஸ். ரீல். தவெக ஆட்சியின் அஸ்திவாரமே இதுதான். இந்த ரெண்டையும் வச்சுதான் வண்டியை ஓட்டுகிறார்கள். எத்தனை நாட்களுக்கு ஓட்ட முடியும்.
வரட்டும். வந்த பிறகு சொல்கிறோம்.
பிரிந்து சென்றவர்கள் அல்ல. நீக்கினால் நீக்கப்பட்டதுதான். ஒரு கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் எடுத்ததுதான். ஒவ்வொரு கட்சி ஆரம்பித்து ஆங்காங்கே சென்று செட்லாகி விட்டார்கள். இதைப்பற்றி கேள்வி கேட்காதீர்கள்.
மைனஸ் பூஜ்ஜியம்.