விவசாய நிலங்களை இனி எளிதில் மாற்ற முடியாது- தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

நிலத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து கட்டடங்களின் வரைபடம்சம்பந்தப்பட்ட நிலத்தின் சிட்டா நகல் என மொத்தமாக 9 நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on: 
Summary

தமிழக அரசு விவசாய நிலங்களை மாற்றுவதற்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. நில ஆவணங்கள், சுற்றுப்புற விவரங்கள், நீர் வெளியேறும் வசதி உள்ளிட்ட 9 முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விளை நிலங்களை, விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றி கட்டுமானப் பணிகள் அல்லது பிற பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வரைபடம்

விவசாய நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றி பயன்படுத்துவதாக இருந்தால் அது குறித்து விண்ணப்பிக்கும் போது நிலத்தின் கிரயம் அல்லது குத்தகை பத்திரம், நிலத்தின் பட்டா நகல், கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வழியை காட்டும் வரைபடம் சமர்ப்பிக்க வேண்டும்.

நிலத்தை சுற்றி 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள அனைத்து கட்டடங்களின் வரைபடம்சம்பந்தப்பட்ட நிலத்தின் சிட்டா நகல் என மொத்தமாக 9 நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

தடையில்லா சான்றிதழ்

விளைநிலம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர், வேளாண்மை துறையின் இணை இயக்குனர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆகிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

விளை நிலங்களில் வீடுகள் அல்லது கட்டடம் கட்ட விரும்பினால் நில ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டும் போதாது. நிலத்தின் சுற்றுப்புற விவரங்கள், நீர் வெளியேறும் வசதி, உள்ளிட்டவற்றிற்கான விவரங்களுடன் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X