தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு - ஆ.ராசா

நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு - ஆ.ராசா
Published on: 
Summary

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்தும் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கும்.

* Fair Delimitation என்பதால் தற்போது அல்ல எப்போதுமே திமுக ஆதரித்து வந்துள்ளது.

* தொகுதி மறுவரையறை மசோதா ஆதரவு நிலைப்பாடு என்பது புதிய முடிவு அல்ல, அரசியல் காரணங்களுக்கானது அல்ல.

* அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்தும் மசோதாவிற்கு ஆதரவு.

* 7.21 எனும் அளவில் தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உயர்கிறது என்பதை கவனத்தில் கொண்டுள்ளது திமுக.

* தற்போது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 எனும் அளவில் இருக்கும் நிலையில் புதிய மசோதாவில் 7.21 என உயர்கிறது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதம் என்ற அளவில் குறையாது என்பதால் ஆதரவு அளித்துள்ளோம்.

* நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளது.

* மத்திய அரசு கொண்டு வரும் தற்போதைய மசோதாவால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X