தூணில் ஏற்றப்படாத தீபம்: தவெக அரசுக்கு சு.வெங்கடேசன் பாராட்டு!

வழக்கம்போல இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு நன்றி!
தூணில் ஏற்றப்படாத தீபம்: தவெக அரசுக்கு சு.வெங்கடேசன் பாராட்டு!
Published on: 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயிலில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்திய த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

“திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் சிரசின் மேல் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகாமை கல் தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் சுடர்வீசுகிறது.

திருப்பரங்குன்றம் கோயிலின் வழக்கத்தையும், மரபுகளையும், ஆகமங்களையும் சேர்த்து தமிழ் நாட்டின் மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்திய த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள்.

வழக்கம்போல இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு நன்றி!

பக்தர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X